இங்கிலாந்தில் Parasomnia என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள கெல்லி நைப்ஸ் என்பவர் தூக்கத்தில் தன்னை அறியாமலேயே ஆன்லைனில் ரூ.3.2 லட்சத்திற்கு பொருட்களை வாங்கிக் குவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படி இவர் பெற்ற பல பொருட்கள் தனக்கு உபயோகமே படாதவை எனவும், தனது க்ரெடிட் கார்ட் விவரங்கள் ஆன்லைன் செயலிகளில் கொடுக்கப்பட்டுள்ளதால் விபரீதமாவதாகவும் கெல்லி வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இந்த அரிய வகை நோயால் கெல்லி கடனாளியாக மாறியுள்ளார் என்பது மற்றொரு அதிர்ச்சிகர தகவலாகும்.