உத்திரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கஸ்தூரிபா காந்தி என்னும் விடுதியில் பள்ளி மாணவிகள் தங்கியுள்ளனர். அந்த மாணவிகளை வார்டன் அர்ச்சனா பாண்டே என்பவர் கொடூரமாக தாக்கியுள்ளார். சிறு குழந்தைகள் என்று பார்க்காமல் குச்சியால் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால், அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.