உலகம் முழுவதும் ஆண்டுக்கு 1.25 லட்சம் பேர் பாம்பு கடியால் உயிரிழப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், துபாயில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகம் (சிவிஆர்எல்) ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. ஒட்டகக் கண்ணீரில் உள்ள ரசாயனங்கள் பாம்பு கடிக்கு மருந்தாக செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஆய்வு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் நிதிப் பற்றாக்குறையால் இது குறித்த ஆய்வை மேற்கொண்டு தொடர முடியவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.