ராகுல்காந்தி உரையில் இருந்து பல வரிகளை நீக்கிய சபாநாயகர்

84பார்த்தது
ராகுல்காந்தி உரையில் இருந்து பல வரிகளை நீக்கிய சபாநாயகர்
மக்களவையில் நேற்று (ஜூலை 1) குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உரையில் இடம் பெற்ற, பல வரிகளை சபாநாயகர் ஓம் பிர்லா நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாஜக, அதானி, அம்பானி மீதான விமர்சனங்கள், நீட் தேர்வு வணிகமயமாகிவிட்டது, அக்னி வீர் திட்டம் ஆகியவை குறித்து ராகுல் பேசிய வார்த்தைகள் அவை குறிப்பில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி