2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 16ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் கடந்த இரண்டரை மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டது.
இனி பணம், பொருட்கள் கொண்டு செல்வதில் எந்தவித கட்டுப்பாடும் இருக்காது. அதுமட்டுமின்றி, அரசு வழக்கமான பணிகளை இன்று (ஜுன் 7) முதல் மேற்கொள்ளலாம்.