திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் கடந்த 29ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக பிற மாநிலங்களில் இருந்து வந்து கம்பளி போர்வை விற்பவர்களின் ஆதார் நகல் விவரங்களும் சேகரித்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.