தமிழ் திரையுலகில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் தனது மனைவி ஆர்த்தியுடன் இன்று (டிச. 08) மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளழகர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவருடன் செல்பி எடுக்க பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டனர். இதனுடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களும் சிவகார்த்திகேயனுடன் செல்பி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.