கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, ஓசூர்பகுதிகளில் இரவு நேரங்களில் உணவுக்காக வெளியேறும் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், வனப்பகுதியை ஒட்டி உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. அறுவடைக்கு தயாராக உள்ள நெல், ராகி, காய்கறி தோட்டங்களை சேதப்படுத்தி வருகிறது. தொடர்ந்து இரவு நேரங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால், சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.