தென் கொரியாவில் திடீரென அவசரநிலை பிரகடனம் செய்து அந்நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அதிபர் யூன்-சுக்-யோலை பதவி நீக்கம் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானத்தை ஆளும் கட்சி புறக்கணித்ததால் அந்த தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. அதிபருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், யூன்-சுக்-யோலின் பதவி பறிக்கப்படும் வரை அடுத்தடுத்து தீர்மானங்கள் கொண்டுவரப்படும் என எதிர்க்கட்சிகள் உறுதியளித்துள்ளனர்.