சிரியா உள்நாட்டுப் போர்: ஆட்சி கவிழ்ப்பு

65பார்த்தது
சிரியா உள்நாட்டுப் போர்: ஆட்சி கவிழ்ப்பு
சிரியா அதிபர் பஷார் அசாத் பதவியில் இருந்து தூக்கப்பட்டதாகவும், அனைத்து கைதிகளும் விடுவிக்கப்பட்டதாகவும் சிரியா அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. டமாஸ்கஸைக் கைப்பற்றுவதற்கான செயல்பாட்டு அறை, "சுதந்திர சிரியா அரசின்" அரசு நிறுவனங்களைப் பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சி போராளிகளையும் குடிமக்களையும் அழைப்பதாக தெரிவித்துள்ளது. அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, இன்று அதிகாலையில் சிரியா அரசாங்கம் வீழ்ந்ததாக கிளர்ச்சிக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி