தமிழக வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட மத்தியக்குழுவினர் நேற்று மாலை சென்னை வந்தனர். அவர்களிடம், வெள்ளப்பாதிப்பால் ஏற்பட்ட பேரழிவிற்கு தற்காலிக மற்றும் நிரந்தர மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.6,675 கோடி நிதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை மனு அளித்தார். இந்த நிலையில், பெஞ்சல் புயல், வெள்ள பாதிப்புகள் குறித்து விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மத்தியக்குழு ஆய்வு செய்து வருகிறது.