உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா எல்லையில் கடந்த சில தினங்களாக, புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று 'டெல்லி சலோ' பேரணியை மீண்டும் தொடங்கியுள்ளனர். பேரணியாக டெல்லி செல்ல முற்பட்ட விவசாயிகளை போலீசார் தடுத்தி நிறுத்தியுள்ளனர்.