நீலகிரி: கூடலூர் அருகே கம்மாத்தி தடுப்பணையில் முதலை நடமாட்டம் அதிகரித்துள்ளது. தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பியதால் முதலைகள் தடுப்பணைக்கு வந்துள்ளன. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தடுப்பணை பகுதிகளுக்கு அருகில் செல்லும் போது கவனமாக இருக்குமாறு வனத்துறையினர் இன்று பொதுமக்களை எச்சரித்துள்ளனர். கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவோர் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.