மகாராஷ்டிராவின் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்ற மறுநாளே, வருமான வரித்துறை கடந்த 2021-ல் பறிமுதல் செய்த அவருக்கு தொடர்புடைய சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விடுவித்துள்ளது. 2021-ல் சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அஜித் பவார் இருந்தபோது ரெய்டுகள் நடத்தி பினாமி சட்டத்தின் கீழ் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது இந்த குற்றச்சாட்டை பினாமி சொத்து பரிவர்த்தனை தடுப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நிராகரித்ததால் சொத்துக்கள் விடுக்கப்பட்டுள்ளது.