வடகிழக்கு பருவமழைக் காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இருப்பினும், வானிலை நிகழ்வுகளின்படி 2024 அக்டோபர் மாதம் 15ம் தேதி தொடங்கிய பருவமழை 2025 ஜனவரி 2ம் வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நடப்பாண்டில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 33% கூடுதலாகப் பெய்துள்ளது என்றும் நாளை (ஜன.01) முதல் குளிர்கால பருவமழை கணக்கீடு தொடங்குவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.