தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று டிச.31 ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. 7 முதல் 11 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் இன்று தமிழ்நாட்டிற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.