அந்த திரைப்படம் கனவாகவே போய்விட்டது

72பார்த்தது
அந்த திரைப்படம் கனவாகவே போய்விட்டது
ரஜினியை வைத்து தொடங்கப்பட்டு பின்பு கைவிடப்பட்ட ராணா படம் குறித்து கே.எஸ் ரவிக்குமார் அண்மையில் மனம் திறந்தார். “அந்தப் படம் கனவாகவே போய்விட்டது. தசாவதாரத்திற்கு அடுத்ததாக ராணா படம் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன். படத்திற்காக ப்ரீ புரடக்‌ஷன் வேலைகளெல்லாம் ஆரம்பித்து பூஜை போட்டோம். உடனே தீபிகா படுகோனேவை வைத்து ஒரு பாடலையும் எடுத்துவிட்டோம். அந்தச் சமயத்தில் ரஜினிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது, அதன் பிறகு பல காரணங்களால் தொடர முடியவில்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி