மோடி வருகை: விவேகானந்தர் பாறைக்குச் செல்ல அனுமதி மறுப்பு

72பார்த்தது
மோடி வருகை: விவேகானந்தர் பாறைக்குச் செல்ல அனுமதி மறுப்பு
கன்னியாகுமரி நடுக்கடலில் உள்ள விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி இன்று (மே 30) இந்திய கடற்படையின் அதி உச்சமான கமாண்டோ படையான மார்க்கோஸ் படை வீரர்கள் பாதுகாப்புடன் தியானம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமரின் வருகையையொட்டி பூம்புகார் படகு போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதுடன் பாதுகாப்பு நலன் கருதி விவேகானந்தர் பாறைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி முதல் அனுமதிக்கப்பட்ட படகு போக்குவரத்து சேவை சற்றுமுன்னர் நிறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி