பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நாளை நிறுத்தம்

82பார்த்தது
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நாளை நிறுத்தம்
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. இந்த ரோப்கார் பராமரிப்பு பணியை முன்னிட்டு, தினமும் 1 மணி நேரமும் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி நாளை(வியாழக்கிழமை) ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ரோப்கார் சேவை நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன.