மோடி வருகை - போலீஸ் கட்டுப்பாட்டில் பகவதி அம்மன் கோயில்

54பார்த்தது
மோடி வருகை - போலீஸ் கட்டுப்பாட்டில் பகவதி அம்மன் கோயில்
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று (மே 30) மாலை கன்னியாகுமரிக்கு வருகிறார். தொடங்கு அங்கு உள்ள விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்ய இருக்கிறார். முன்னதாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்ல இருக்கிறார். இதன் காரணமாக அந்த கோயில் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. பிரதமர் வருகையையொட்டி, கன்னியாகுமரியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் வருகையை ஒட்டி கன்னியாகுமரி கடல் பகுதியில் 3 நாட்கள் மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி