கொத்தமல்லி ஒரு கட்டு ரூ.100.. ஓசியில் வாங்க முடியாத நிலை!

81பார்த்தது
கொத்தமல்லி ஒரு கட்டு ரூ.100.. ஓசியில் வாங்க முடியாத நிலை!
தமிழகத்தின் ஓசூர் பகுதியில் கொத்தமல்லியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கட்டு ரூ.100க்கு விற்பனையாகிறது. சூளகிரி, ராயக்கோட்டை, தளி, அஞ்செட்டி, பாகலூர், பேரிக்காய், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஓசூர், சூளகிரி ராயக்கோட்டை உள்ளிட்ட சந்தைகளுக்கு கொத்தமல்லி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் மூலம் ரூ.90ல் இருந்து ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மளிகை கடைகளில் ஓசியில் வாங்கப்பட்டு வந்த கொத்தமல்லி கடும் விலை உயர்வால் ரூ.20 கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி