பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் குறித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில். "தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.