இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 100 ரூபாய் நோட்டு லண்டனில் ரூ.56,49,650க்கு ஏலம் போயுள்ளது. ஏன் இவ்வளவு தொகை? அதாவது இந்த 100 ரூபாய் கரன்சியானது 1950 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட வரிசை எண் HA 078400 கொண்ட நோட்டாகும். இவை 'ஹஜ் நோட்டுகள்' என அழைக்கப்படுகின்றன. 20ஆம் நூற்றாண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ளுபவர்களுக்காக இந்திய ரிசர்வ் வாங்கி இந்த சிறப்பு கரன்சியை உருவாக்கியது. அந்த காலகட்டத்தில் வளைகுடா நாடுகளில் இந்த கரன்சி சட்டபூர்வமாக பயன்படுத்தப்பட்டது.