பொங்கல் பண்டிகையை ஒட்டி வருகிற ஜன.,10 முதல் 13ஆம் தேதி வரை 14ஆயிரத்து 104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கு இடையேயும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் 8368 பேருந்துகளுடன் கூடுதலாக 5736 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து சுமார் 8 லட்சம் பேர் வரை மற்ற மாவட்டங்களுக்கு பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.