தமிழக பள்ளிக்கல்வித் துறையில் மாணவர்களுக்கு விலையில்லா பொருட்களாக பாடப்புத்தகங்கள், காலணி, சீருடை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவற்றை ஏதேனும் ஒரு பள்ளியில் மொத்தமாக வைத்துவிடுகின்றனர். அங்கிருந்து, மற்ற பள்ளிகள் எடுத்துச் செல்ல கூறப்படுகிறது. பொருட்களை எடுத்து செல்வதற்காக ஆசிரியர்களே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பகிறது. இதனால், அனைத்து பள்ளிகளுக்கு அரசு தரப்பிலேயே பொருட்களை வழங்கிட நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.