தமிழக சட்டப்பேரவையில் கலந்துகொண்ட அதிமுகவினர், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை தொடர்பாக யார் அந்த சார்? என்ற பேட்ஜ், பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். இதனால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மாணவி பாலியல் வழக்கில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இனி இப்படி ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும். அரசை நம்பி பிரயோஜனம் இல்லை” என்றார்.