சீனாவில் 'ஹியூமன் மெடாநிமோ’ (HMPV) என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில், HMPV தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு குழந்தைக்கு HMPV தொற்று உறுதியான நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏற்கனவே பெங்களூருவைச் சேர்ந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத குழந்தைக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.