ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நான்கு முக்கிய கோள்களின் சீரமைப்பு நடைபெற உள்ளது. வெள்ளியும், சனியும் பல மில்லியன் மைல்கள் தொலைவில் இருந்தாலும் நெருங்கி வந்து தொடுவது போல இருக்கும். வியாழன் வானத்தில் உயரமாகத் தெரியும். செவ்வாய் கோளானது சூரியனுக்கு நேரே அமைவதால் அது மிகவும் பிரகாசமாகத் தெரியும். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றையும் தொலைநோக்கி கொண்டு காணலாம்.