தற்போதைய காலத்தில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை தூக்கமின்மை தான். சரியாக தூக்கம் வராதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஜாதிக்காய் பொடியை வாங்கி இரண்டு சிட்டிகை அளவிற்கு பாலில் சேர்த்து இரவில் குடிக்க வேண்டும். இதை நீர்த்த பாலில் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். ஜாதிக்காய்க்கு இயற்கையாகவே நல்ல உறக்கத்தை கொடுக்கும் தன்மை இருக்கிறது. எந்த ரசாயனமும் இல்லாததால் உடலுக்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.