தமிழகத்தில் 2024-ல் இறந்த யானைகளின் எண்ணிக்கையை தமிழக வனத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 123 யானைகள் மரணித்துள்ளதாகவும், அதில் 107 யானைகள் இயற்கையாகவும், 16 யானைகள் இயற்கைக்கு மாறான காரணங்களாலும் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் 21 யானைகள் உயிரிழந்துள்ளன. யானைகள் உயிரிழப்பு எண்ணிக்கை 2022-ல் 113 ஆகவும், 2023-ல் 129 ஆகவும் இருந்தது. தமிழகத்தில் வாழும் 3,063 யானைகளில், அதிகபட்சமாக நீலகிரி மலைப் பகுதிகளில் 2,253 யானைகள் வாழ்கின்றன.