மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்தி பெற்றவை. ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் களமிறங்குவதை காண பலரும் மதுரையில் குவிவார்கள். இந்நிலையில் மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (ஜன. 06) மற்றும் நாளை (ஜன. 07) நடைபெறுகிறது.