வன்னியர்களும் பட்டியலின சமூகத்தினரும் சண்டையிட்டால் திமுகவுக்கு கொண்டாட்டம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நேற்று (டிச., 24) ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார். வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளித்தால் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம். மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால் என்ன? அவர் என்ன உழைக்கவில்லையா? என கேள்வியெழுப்பினார்.