சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் மாணவர் கண்முன்னே வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலர்களான இருவரும் நேற்று (டிச. 24) பேசி கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு பேர் அங்கு வந்து காதலனை தாக்கிவிட்டு காதலியை பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து அந்த மாணவன் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் போலீஸ் விசாரிக்கிறது.