நீலகிரி: கோத்தகிரி தனியார் மருத்துவமனை வளாகத்தில் கருஞ்சிறுத்தை புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம். ஆனால், மருத்துவமனை வளாகத்திற்குள் சிறுத்தை நுழைந்தது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று (டிச.,24) இரவு 7.30 மணி அளவில் வனப்பகுதியிலிருந்து வந்த சிறுத்தை, மருத்துவமனை வளாகத்தில் புகுந்து அங்கு இருந்த வளர்ப்பு நாயை துரத்தியது. இதனால் நோயாளிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் பீதியடைந்தனர்.