7ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஹெட் மாஸ்டர்

69பார்த்தது
7ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஹெட் மாஸ்டர்
கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம், சிட்லகட்டா கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்ததில், மாணவி படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளியின் அலுவலக அறையில் வைத்து பல முறை பலாத்காரம் செய்ததாக அந்த மாணவி கூறியுள்ளார். பின்னர் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் வெங்கடேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி