சிறப்பு வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிப்பு!

70பார்த்தது
சிறப்பு வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிப்பு!
நெல்லை- எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜூன் 6,13,20,27 ஆகிய தேதிகளில் மாலை 6.45க்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் 8.30க்கு எழும்பூர் செல்லும். ஜூன் 7,14,21,28 ஆகிய தேதிகளில் எழும்பூரில் மதியம் 3 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் 7.10க்கு நெல்லையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 1 – 30 வரை மோளகவல்லி-நேமக்கல்லு, ரேணிகுண்டா – ஏர்பேடு பிரிவுகளுக்கு இடையேயான ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி