"மாணவர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை”

85பார்த்தது
"மாணவர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை”
மாணவர்கள் மத்தியில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, எதை படிக்க வேண்டும் என்பது குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை என உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 1,500 மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுகின்றனர். அதில் 5% மாணவர்களே தரமானவர்களாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் திறமையானவர்கள். அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பார்கள். அவர்களை சரியான வழியில் வழிநடத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி