நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரசு பேருந்தின் முன்பக்கத்தில் ஈஸ்வரி என்ற பெண் ஏற முயன்றார். அப்போது, ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாக தெரிகிறது. இதனால் நிலை தடுமாறி அந்த பெண் கீழே விழுந்தார். இதனால், அவர் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. வலியால் துடித்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த இடத்தில் வேகத்தடை அமைக்க கோரி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.