அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொண்டர்களின் கைக்கு வரும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இபிஎஸ் ரத்து செய்துள்ளனர். தமிழக மக்கள் இதனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதனால் தான் அவர்கள் சந்தித்த தேர்தலில் எல்லாம் தோல்வியை சந்தித்துள்ளனர்” என்று பேட்டியளித்துள்ளார்.