இன்றுடன் நிறைவடையும் மீன்பிடி தடைக்காலம்

83பார்த்தது
இன்றுடன் நிறைவடையும் மீன்பிடி தடைக்காலம்
தமிழக கடலில் மீன்வளப் பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டு ஏப்.15-ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது. இதனால் வங்கக்கடல், பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றுடன்(ஜூன் 14) மீன்பிடி தடைகாலம் முடிவடைந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தேவையான ஐஸ், டீசல் உபகரணங்களை படகில் ஏற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 60 நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் பரபரப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்தி