திரைப்பட இயக்குனர் காலமானார்

68பார்த்தது
திரைப்பட இயக்குனர் காலமானார்
மலையாள திரைப்பட இயக்குனர் சுதிர் போஸ் (53) காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை காலமானார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கலாபவன் மணி, முகேஷ், ரம்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த 'கபடி கபடி' என்ற மலையாளப் படத்தை இயக்கியவர். பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி