மசாஜ் செய்ய மறுத்த தந்தை.. அடித்துக்கொன்ற மகன்!

51பார்த்தது
மசாஜ் செய்ய மறுத்த தந்தை.. அடித்துக்கொன்ற மகன்!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நவாப்புரா பகுதியில் வசித்து வருபவர் தத்தாத்ரேயா ஷெண்டெ. இவருக்கு பிரணவ், குஷால் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று தனது காலில் மசாஜ் செய்யும் படி குஷால், அவரது தந்தை தத்தாத்ரேயாவிடம் கூறியுள்ளார். அதற்கு தத்தாத்ரேயா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குஷால், தந்தையென்றும் பாராமல் அவரை சரமாரியாக அடித்ததில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டார். தற்போது குஷாலை போலீசார் கைது செய்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி