முன்னாள் மாடலும், தன்னை ஆரோக்கிய நிபுணர் என அழைத்துக்கொள்ளும் ட்ராய் கேசி, பல ஆண்டுகளாக தினமும் காலையில் தனது சிறுநீரையே குடித்து வருவதாகவும், அதுதான் தனது ஆரோக்கியத்திற்கான ரகசியம் எனவும் கூறினார். காலை சிறுநீரில் ஸ்டெம் செல்கள் & ஆன்டிபாடிகள் உள்ளன என ட்ராய் கூறியுள்ளார். ஆனால் ட்ராயின் கூற்றுக்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை எனவும், சிறுநீர் குடிப்பது தொற்று மற்றும் ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.