தி.மலையில் நிவாரண பொருட்கள் வழங்கிய துணை முதல்வர்

53பார்த்தது
தி.மலையில் நிவாரண பொருட்கள் வழங்கிய துணை முதல்வர்
திருவண்ணாமலை: மீனாட்சி திருமண மண்டபத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து நேற்று (டிச., 02) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள், பிரட், பாய், பெட்ஷீட் உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் வழங்கினார். அப்போது அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, மேயர் நிர்மலா வேல்மாறன், சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி