தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பேசிய தலைவர் விஜய், “புதிய வரலாற்றை படைக்க தயாராக இருங்கள். ஒரே குடும்பம் தமிழகத்தை சுரண்டி வாழ்வது அரசியலா?. மாநாடு முதல் பொதுக்குழு கூட்டம் வரை ஏராளமான தடைகள். மத்திய அரசுக்கு கொஞ்சமும் குறைவில்லாத பாசிச ஆட்சி தமிழகத்திலும் நடைபெறுகிறது. அணை போட்டு ஆற்றை தடுக்கலாம், காற்றை தடுக்க முடியாது. அப்படி தடுக்க முயன்றால் அது புயலாக மாறிவிடும்” என்றார்.