அதிகாரிகள் போல் பேசி கோடிக் கணக்கில் மோசடி

66பார்த்தது
அதிகாரிகள் போல் பேசி கோடிக் கணக்கில் மோசடி
கர்நாடகா உடுப்பியைச் சேர்ந்த அருண்குமார் (53) என்பவருக்கு, மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் எனக் கூறி அழைப்பு வந்துள்ளது. முதியவர் பெயரில் சட்டவிரோதப் பொருட்கள் அடங்கிய பார்சல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பிரச்னையை தீர்க்க பணம் வேண்டும் இல்லை எனில் கைது செய்யப்படுவீர்கள் என கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அருண்குமார் ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் வரை அனுப்பியதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி