மாநிலங்களவையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில் அதிமுக எம்.பி. தம்பிதுரை வெறும் 1 நிமிடம்தான் பேசினார். கிரிக்கெட்டில் முதல் பந்திலேயே டக்-அவுட் ஆகும் பேட்ஸ்மேன் கூட இதைவிட அதிக நேரம் களத்தில் இருப்பார். அப்படி அவர் பேசிய 1 நிமிடத்தில், அதிமுக இதை ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா என்பதை சொல்லவே இல்லை என நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.