விவசாயிகளுடன் இன்று மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை

62பார்த்தது
விவசாயிகளுடன் இன்று மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை
விவசாயிகளுடன் இன்று மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. டெல்லியை நோக்கி பேரணி நடத்த விவசாயிகள் தயாராகி வரும் சூழலில், மத்திய அரசு அவர்களை திங்கள்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. மறுபுறம், டெல்லி பேரணிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் நாளை ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் டெல்லியில் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.
Job Suitcase

Jobs near you