அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கடந்த ஜன.22ஆம் தேதி நடந்தது. அயோத்தி ராமர் கோயில் திறப்பை தவறாக விமர்சிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டி இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இளைஞரை நிர்வாணமாக்கி அவரது அந்தரங்க உறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்துள்ளனர். இச்சம்பவம் எப்போது எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.