சமீபத்தில் வைரலாக ஒரு வீடியோவில் ஸ்விகி நிறுவன ஊழியர் உணவு டெலிவரி செய்துவிட்டு அந்த வீட்டின் வாசலில் இருந்த ஒரு ஜோடி ஷூவை திருடி சென்றார். இந்நிலையில் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் சோனு சூட், அந்த டெலிவரி பாய் ஷூ திருடியதற்காக அவர் மூத்த எந்த நடவடிக்கையும் எடுக்காதீர்கள். அதற்கு பதிலாக அவருக்கு ஒரு ஜோடி ஷூ வாங்கி தாருங்கள் என X தளத்தில் பதிவிட்டிருந்தார். இது வைரலாக நிலையில் அவருக்கு ஆதரவாக பலரும் எதிராக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.